வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth.K
Last Modified: செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (09:46 IST)

பாகிஸ்தானை ஜெயிக்க அவங்க உள்ள வருவாங்க! – அணி தேர்வு குறித்து டிராவிட் சூசகம்!

இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில் வீரர்கள் தேர்வு குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சூசகமான தகவலை தெரிவித்துள்ளார்.



இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட 6 ஆசிய நாட்டு கிரிக்கெட் அணிகள் போட்டியிடும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்டு 30 தொடங்கி செப்டம்பர் 17 வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளில் நடைபெறுகிறது.

இதில் இந்தியாவின் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகின்றன. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அனிகள் இடையேயான போட்டி செப்டம்பர் 2ம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் “காயத்தில் இருந்து மீண்டுள்ள சில வீரர்கள் மீண்டும் இந்திய அணிக்கு வருகை தர உள்ளனர். அவர்களுக்கு நாங்கள் வாய்ப்பு அளிப்போம். உண்மையில் நான் இப்போது ஆசியக்கோப்பை குறித்து சிந்திக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்துள்ள நிலையில் குடும்பத்துடன் நார்களை செலவிடுவோம். இந்திய ஒருநாள் போட்டி அணி பெங்களூரில் கூடி ஆசியக்கோப்பை போட்டிக்காக பயிற்சி செய்ய உள்ளது” என கூறியுள்ளார்.

கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மிடில் ஆர்டர் வீக்காக இருந்ததே தோல்விக்கு காரணம் என தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்ட வீரர்களுக்கு வாய்ப்பு என ராகுல் டிராவிட் கூறியிருப்பது கே.எல்.ராகுலையும், ஸ்ரேயாஸ் ஐயரையும் மனதில் வைத்துதான் என கூறப்படுகிறது. இருவரும் மீண்டும் அணியில் இடம்பெறும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K