தொடர்புடைய செய்திகள்
- கோலியால்தான் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது… ஒலிம்பிக் இயக்குனர் பகிர்ந்த தகவல்!
- ரோஹித், கோலி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்கள்… ஹர்பஜன் சிங் பதில்!
- துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் கோலி & ரோஹித்!
- சச்சினுக்குப் பிறகு ரோஹித் ஷர்மாதான்… 27 ஆண்டு கால பெருமை தகர்ப்பு!
- இந்திய அணி இலங்கைக்கு எதிராக திருப்தி அடைந்துவிட்டதா?... ஆதங்கத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா!
துலீப் கோப்பைத் தொடரில் கோலி, ரோஹித் விளையாடவில்லை… ரசிகர்கள் ஏமாற்றம்!
இந்திய அணிக்கு அடுத்த 35 நாட்களுக்கு எந்தவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் கிடையாது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த இந்திய அணிக்கு இது ஓய்வு காலமாக அமைந்துள்ளது.
இந்த இடைவேளை இந்திய ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள துலிப் கோப்பை தொடரில் அனைத்து முன்னணி வீரர்களும் கலந்துகொள்ளுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் விளையாடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது அவர்கள் விளையாட மாட்டார்கள் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில் ஆகியோர் விளையாடுவார்கள் என சொல்லப்படுகிறது.