ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (08:17 IST)

இந்திய அணி இலங்கைக்கு எதிராக திருப்தி அடைந்துவிட்டதா?... ஆதங்கத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. டி 20 உலகக் கோப்பையை வென்ற ஒருமாதத்துக்குள்ளாகவே முழு பலம் கொண்ட இந்திய அணி இலங்கையிடம் தொடரை இழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதன் மூலம் 27 ஆண்டுகள் கழித்து ஒருநாள் போட்டித் தொடரை இலங்கையிடம் இழந்திருக்கிறது இந்திய அணி. இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் வர்ணனையாளர் ‘இலங்கைக்கு எதிராக இந்தியா அணி திருப்தியை எட்டிவிட்டதா?’ எனக் கேட்க அதற்கு “இந்தியாவுக்காக விளையாடும் போது திருப்தி என்பதே கிடையாது” என பதிலளித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் “இந்த தொடர் முழுவதும் இலங்கை அணி எங்களை விட சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது. அவர்களுக்கு நாம் வாழ்த்துகளைக் கொடுக்க வேண்டும். எங்கள் அணியில் அனைவரும் தங்கள் தனித்திட்டங்களை வகுத்து விளையாட வேண்டும். ஆனால் கிரிக்கெட்டில் இதுபோன்ற தோல்விகள் எல்லாம் நடப்பதுதான். விரைவில் நாங்கள் இதிலிருந்து மீண்டு வருவோம்” எனக் கூறியுள்ளார்.