தொடர்புடைய செய்திகள்
- தேர்வுக்குழு அளித்த கவுன்சிலிங்… துலீப் கோப்பையில் விளையாட தயாரான இஷான் கிஷான்!
- இம்பேக்ட் ப்ளேயர் விதி நீக்கமா…அணிகளின் எதிர்ப்புக்குக் காதுகொடுத்த பிசிசிஐ!
- இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு! கேப்டன் இவர்தான்! முழு பட்டியல்!
- கிரிக்கெட் மைதானங்களில் புகையிலைப் பொருட்களின் விளம்பரத்துக்கு தடா… செவி மடுக்குமா பிசிசிஐ!
- ப்ளாங்க் செக்லாம் வேணாம்.. பிசிசிஐ பயிற்சியாளராகும் கவுதம் கம்பீர்?
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் கோலி & ரோஹித்!
இந்திய அணிக்கு அடுத்த 40 நாட்களுக்கு எந்தவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் கிடையாது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த இந்திய அணிக்கு இது ஓய்வு காலமாக அமைந்துள்ளது.
40 நாட்கள் கிரிக்கெட் போட்டிகள் இல்லாதது இந்திய ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள துலிப் கோப்பை தொடரில் அனைத்து இந்திய வீரர்களும் கலந்துகொள்ளுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதன் மூலம் கோலி, ரோஹித் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளனர். இவர்கள் தவிர கே எல் ராகுல், பும்ரா, பாண்ட்யா போன்றவர்களை இந்த தொடரில் விளையாட பிசிசிஐ அழைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.