வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (15:19 IST)

கொல்கத்தா – லக்னோ அணிகள் மோதல்.. டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்! – ப்ளேயிங் 11 அப்டேட்!

LSG vs KKR
இன்று பிற்பகல் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன.



இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது கொல்கத்தா அணி. லக்னோ அணி 5 போட்டிகளில் 3 போட்டிகளை வென்றுள்ளது. இரு அணிகளும் தலா 6 புள்ளிகள் வைத்துள்ள நிலையில் இன்று வெற்றி பெறும் அணி மேலும் 2 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேற முடியும் என்பதால் இரு அணிகளும் வெற்றிபெற தீவிரம் காட்டும்.

தற்போது டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கே எல் ராகுல், குயிண்டன் டி காக், தீபக் ஹூடா, அயுஷ் பதோனி, மார்கஸ் ஸ்டாய்னிஸ், நிக்கலஸ் பூரன், க்ருனால் பாண்ட்யா, மொஷின் கான், ரவி பிஷ்னோய், சமர் ஜோசப், யாஷ் தாகுர்,

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : பில் சால்ட், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், அங்கிரிஷ் ரகுவன்சி, ஆண்ட்ரே ரஸல், ரமந்தீப் சிங், மிட்ஷெல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா,

Edit by Prasanth.K