திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2024 (09:44 IST)

அரைசதம் அடித்தும் பயனில்ல! முதல் தோல்வியுடன் அபராதத்தையும் பெற்ற சஞ்சு சாம்சன்!

Sanju Samson
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



ஐபிஎல் சீசனின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. சஞ்சு சாம்சன் 68 ரன்களும், ரியான் பராக் 76 ரன்களும் அடித்து அணியின் ஸ்கோருக்கு பக்கபலமாக இருந்தனர்.

ஆனால் அடுத்து சேஸிங்கில் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அதிரடி ஆட்டத்தால் இலக்கை வேகமாக நெருங்கியது. எனினும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றியை நெருங்கிய நிலையில் கடைசியில் பேட்டிங் இறங்கிய குஜராத் வீரர் ரஷித் கான் அதிரடி ஆட்டத்தால் கடைசி தருணத்தில் குஜராத்தை வெற்றி பெற செய்தார்.


இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் அரை சதம் வீழ்த்தியும் ‘ஆபரேஷன் சக்ஸச் பேஷண்ட் டெட்’ என்பதுபோல ராஜஸ்தான் தோல்வியை சந்தித்தது. இந்த சீசன் தொடங்கி ராஜஸ்தான் அணியின் முதல் தோல்வி இதுவாகும். மேலும் இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் மிகவும் மெதுவாக பந்துவீசியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சத்தை அபராதமாக விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். தோல்வியுடன் அபராதமும் சேர்ந்து கொண்டது ராஜஸ்தான் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K