வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (18:20 IST)

இன்னைக்கு ரெண்டாவது இடம் கன்ஃபர்ம்..? லக்னோ ரசிகர்கள் உறுதி! – DC vs LSG மோதல்!

LSG vs DC
இன்று ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோத உள்ளன.



லக்னோ அணியை பொறுத்தவரை 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று நல்ல ஃபார்மில் உள்ளது. ஆனால் டெல்லி 5 போட்டியில் 1 மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ அணிதான் வெல்லும் என சூடம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக நம்புகிறார்கள் லக்னோ அணி ரசிகர்கள்.

லக்னோ அணியில் கே.எல்.ராகுல், படிக்கல், ஸ்டாய்னிஸ், பூரன் எல்லாரும் நல்ல ஃபார்மில் உள்ள பேட்டர்கள். டி காக் ஆரம்பத்தில் சில போட்டிகளி தடுமாறினாலும் ஆர்சிபி உடனான போட்டிக்கு பிறகு அதிரடியில் இறங்கியுள்ளார். நவீன், க்ருணால் பாண்ட்யா, மயங்க யாதவ் போன்றவர்கள் பவுலிங்கில் சிறப்பாக உள்ளனர்.


ஆனால் டெல்லி அணியில் பேட்டிங் ஆர்டரே ஆட்டம் கண்டு வருகிறது. வார்னர், ப்ரித்வி ஷா விக்கெட் இழந்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் காலியாகிவிடுகிறது. கடந்த சில போட்டிகளில் பொரெல், ஸ்டப்ஸ் கொஞ்சம் தாக்குப்பிடித்து விளையாடுகிறார்கள். ஆனால் பவுலிங் ஆர்டர் சேஸிங்கை கட்டுப்படுத்தும் விதத்தில் இல்லை. நோர்க்கியா, அக்ஸர் படேல் நம்பிக்கை அளிக்கும் பவுலர்களாக உள்ளனர். ஆனால் விக்கெட்டை எடுப்பதற்குள் ஏராளமான ரன்களை கொடுக்கின்றனர்.

இதுவரை டெல்லி போட்டியிட்ட 5 போட்டிகளில் 4ல் தோற்றிருந்தாலும் வெற்றிபெற்ற ஒரு போட்டி நடப்பு சாம்பியன் சிஎஸ்கேவுக்கு எதிரானது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். களம் என்று வந்துவிட்டால் எதுவும் நடக்கலாம். ஒரு சிறு தவறும் டெல்லிக்கு வெற்றியை பெற்று தரும் வாய்ப்பும் உள்ளது. இன்றைய போட்டியில் வென்றால் லக்னோ 2 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

Edit by Prasanth.K