1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (08:43 IST)

மஞ்சள் படையா..? பல்தான்ஸா..? இன்று ஐபிஎல்லின் Great Rivalry! – CSK vs MI மோதல்!

CSK vs MI
இன்று ஐபிஎல் போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான மோதல் நடைபெற உள்ளது.



ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இதுவரை 28 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. ஐபிஎல் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியைதான். இதுவரை நடந்த 16 சீசன்களில் மும்பையும், சென்னையும் மட்டுமே தலா 5 முறை கோப்பைகளை வென்று ஆண்டையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 3ல் வெற்றி 2 தோல்வி என புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. மும்பை அணி முதல் 3 போட்டிகளில் தோற்றாலும் அடுத்த 2 போட்டிகளில் அடுத்தடுத்து சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முன்னேறி வருகிறது. அதனால் இன்று நடைபெறும் போட்டியில் எந்த அணி வெல்லும் என்பதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


ஆனால் இந்த முறை இரண்டு அணிகளுக்கும் லெஜண்டரி கேப்டன்களான ரோகித் சர்மாவும், தோனியும் இல்லாத நிலையில், ருதுராஜ் – ஹர்திக் பாண்ட்யா கேப்பிட்டன்சி மோதல் எந்த வகையில் இருக்கும் என்ற கேள்வியும் உள்ளது. போட்டி மும்பை வான்கடேவில் நடக்க இருப்பதால் மும்பை வீரர்களுக்கு இது சிறிது அதிர்ஷ்டமாக இருக்கலாம். ஆனால் சிஎஸ்கேவின் ரஹானே போன்ற வீரர்களுக்கும் வான்கடே ரன் அடிக்க வசதியான மைதானம்தான்.

முதல் 3 போட்டிகளில் ப்ளேயிங் வராத மும்பை அணி வீரர் ஸ்கை என்னும் சூர்யகுமார் யாதவ் 4வது போட்டியில் டக் அவுட் ஆனார். ஆனால் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி ஃபார்முக்கு வந்துவிட்டார். இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இன்று மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி பரபரப்புக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Edit by Prasanth.K