என்னுடைய ஹீரோ அவர்தான் – கபில் தேவிடம் பாராட்டு நடராஜன்!

Last Updated: ஞாயிறு, 22 நவம்பர் 2020 (11:25 IST)

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள நடராஜன்தான் என்னுடைய ஹீரோ என கபில் தேவ் கூறியுள்ளார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார். டெத் ஓவர்களில் யார்க்கர்களாக வீசி இந்த சீசனில் உலகின் சிறந்த வீரர்களான கோலி, டிவில்லியர்ஸ், தோனி உள்ளிட்ட பல வீரர்களின் விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் நடராஜன். அதனால் இந்த ஆண்டு சீசனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு நடராஜன்தான் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.இதுபோல பலரும் நடராஜனைப் பாராட்டி வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ‘இந்த சீசனில் என்னுடைய ஹீரோ நடராஜன்தான். இளம் வீரரான அவர் பயப்படாமல் பல யார்க்கர்களை வீசினார். வேகப்பந்து வீச்சில் சிறந்த பந்து என்றால் அது யார்க்கர்தான். இப்போது மட்டுமைல்லாமல் 100 ஆண்டுகால கிரிக்கெட்டிலும் யார்க்கர்தான் சிறந்த பந்து. அதைக் கனக்கச்சிதமாக செய்து வெற்றியைப் பெற்றுள்ளார்.’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :