வழிதவறி வந்த பசுமாடு… விற்று காசைப் பங்கு போட்டுக்கொண்ட காவலர்கள்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பசுமாட்டை விற்று காசைப் பங்குபோட்டுக்கொண்டுள்ளனர் போலீஸார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பசுமாடு ஒன்று விளைநிலங்களில் மேய்ந்துள்ளது. அதை பிடித்து கட்டிவைத்த விவசாயிகள் நீண்ட நேரமாகியும் யாரும் வராததால் குன்னத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து தனிப்பிரிவு தலைமைக் காவலர் ரங்கநாதன் 30 ரூபாய்க்கு விற்று அந்தபணத்தை தானும் மற்ற காவலர்கள் மற்றும் ஓட்டுனர்களும் பங்குபோட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த தகவல் காவல் கண்காணிப்பாளருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த செயலில் ஈடுபட்ட காவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.