திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (12:17 IST)

டி20 போட்டியில் வில்லியம்சன் விலகல்..

இன்றைய இந்தியா-நியூஸிலாந்துக்கு எதிரான 4 ஆவது டி20 போட்டியிலிருந்து நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, நியூஸிலாந்துடன் 5 டி20, 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் விளையாடி வருகின்றன. இன்று 4 ஆவது டி20 போட்டி வெல்லிங்க்டன் மைதானத்தில் பகல் 12.30 மணிக்கு (இந்திய நேரம்) தொடங்கவுள்ளது.

3-0 என்ற கணக்கில் இந்தியா முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது எனவே அவருக்கு பதில் இன்று டிம் சவுத்தி கேப்டனாக செயலாற்றுவார்.