உலக கோப்பை கதையை முடித்த வில்லியம்சன்: இங்கிலாந்துக்கு வொயிட் வாஷ்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மொத்தமாக வொயிட்வாஷ் செய்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது நியூஸிலாந்து.
இங்கிலாந்து – நியூஸிலாந்து இடையேயான இரண்டு டெஸ்ட் கொண்ட ஆட்டத்தின் முதல் டெஸ்ட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இரண்டாவதாக களமிறங்கிய நியூஸிலாந்து தனது அதிரடி ஆட்டத்தால் 615 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வாட்லிங் 205 ரன்னும், கேப்டன் கேன் வில்லியம்சன் 51 ரன்னும், மிட்செல் சாண்ட்னர் 126 ரன்களும் எடுத்து ரன்ரேட்டை அதிகப்படுத்தினர்.
பிறகு மீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸில் களம் இறங்கிய இங்கிலாந்து மோசமான ஆட்டத்தையே தந்தது. 96 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 197 ரன்கள் மட்டுமே எடுத்தது இங்கிலாந்து. இதனால் முதல் இன்னிங்ஸிலேயே வெற்றி பெற்றது நியூஸிலாந்து.
இது ஒருபக்கம் நியூஸிலாந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதே சமயம் உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு சம அளவு ரன்கள் எடுத்தும் அதிக பவுண்டரிகள் அடித்ததன் பேரில் கோப்பை இங்கிலாந்து சென்றது. அன்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஆதரவாக பல குரல்கள் ஒலித்தன. இன்று அதே இங்கிலாந்தை மொத்தமாக வொயிட் வாஷ் செய்து நிற்கும் கேன் வில்லியம்சனை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.