திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஜனவரி 2020 (11:57 IST)

டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் செய்ய முடிவு!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்ற நிலையில் இன்று அதே மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நடைபெற உள்ளது 
 
இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன்னர் போடப்பட்ட நிலையில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். கடந்த போட்டியிலும் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் இந்தியா அணி சேஸ் செய்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியிருந்தும் டாஸ் வென்ற வில்லியம்சன் முதலில் பேட்டிங் எடுத்து இந்தியாவுக்கு சேஸ் வாய்ப்பைக் கொடுத்து உள்ளது ஆச்சரியமாக உள்ளது 
 
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இந்த போட்டியை வென்றால் தொடரை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இன்றைய போட்டியில் கடந்த போட்டியில் விளையாடிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி வீரர்களே விளையாட உள்ளனர் என்பதும், இரு அணியில் எந்தவிதமான மாற்றங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது