இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்கு.... வெற்றி பெறுமா..? ரசிகர்கள் ஆர்வம் !
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றது. இதனையடுத்து இன்று இரு அணிகளுக்கும் இடையே 2வது டி20 போட்டி நடைபெற்று வருகின்றது.
இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 133 எடுத்து, இந்திய அணிக்கு இலக்கை நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து பேட்டிங் செய்யவுள்ள இந்திய அணி வெற்றி பெறுமா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.