செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (15:09 IST)

கோலி ஓய்வு பற்றி பேசிய அப்ரிடி… இந்திய வீரரின் பதில் இதுதான்!

இந்திய அணியின் மூத்த வீரர் கோலி ஓய்வு பெறவேண்டும் என ஷாகித் அப்ரிடி பேசியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து அந்த மோசமான நாட்களை முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த ஆசியக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 276 ரன்களோடு அவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் கோலியின் கம்பேக் குறித்து அனைவரும் பாராட்டி வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கோலி தன் ஃபார்மின் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வை அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “கோலி தன் ஓய்வு பற்றி சிந்திக்கும் காலம். ஒரு சில வீரர்களே தான் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு முடிவை எடுப்பார்கள்.” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்ரிடியின் இந்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா “அன்பிற்குரிய அப்ரிடி, சிலர் ஒருமுறைதான் ஓய்வு பெறுவார்கள். அதனால் விராட் கோலியை இதில் இருந்து விட்டுவிடுங்கள்” எனக் கூறியுள்ளார்.