தொடர்புடைய செய்திகள்
- விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர் கருத்து
- ஆஸி. அணிக்கு அடுத்த கேப்டன் நானா? டேவிட் வார்னரின் பதில் இதுதான்!
- கோலி ஓய்வு பற்றி பேசிய அப்ரிடி… இந்திய வீரரின் பதில் இதுதான்!
- காயத்தில் இருந்து மீண்ட ஷாகீன் அப்ரிடி.. டி 20 உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
- ஐசிசி தரவரிசையில் கோலி முன்னேற்றம்… ஆசியக் கோப்பை சதம் எதிரொலி!
டி 20 போட்டிகளில் கோலி ஓய்வு பெறவேண்டும்… சோயிப் அக்தர் சொல்லும் காரணம்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி டி 20 போட்டிகளில் ஓய்வு பெறவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
கோலி பார்மில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரே எப்போதும் பேசுபொருளாக இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து அந்த மோசமான நாட்களை முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த ஆசியக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 276 ரன்களோடு அவர் முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் அவர் உச்சகட்ட பார்மில் இருக்கும்போதே ஓய்வு பெறவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி பேசியது கவனத்தை ஈர்த்தது. அதையடுத்து இப்போது மற்றொரு பாகிஸ்தான் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் கோலி டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி “கோலி டி 20 உலகக்கோப்பையோடு இந்த வடிவில் ஓய்வை அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அவரால் மற்ற வடிவங்களில் நீண்ட நாட்களுக்கு விளையாட முடியும். தொலைநோக்கு பார்வையில் கோலி இந்த முடிவை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.