ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 11 மே 2024 (07:39 IST)

லக்னோ அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறாரா கே எல் ராகுல்… தீயாய் பரவிய தகவல்!

சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. இந்நிலையில் இந்த போட்டி முடிந்ததும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் கோயங்கா ராகுலிடம் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்த காட்சி வெளியாகி இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில் கோயங்கா ராகுலையும் அணி வீரர்களையும் கோபமாகத் திட்டி பேசுவது போல அவரது உடல்மொழி இருந்தது. அவரிடம் பதிலுக்கு எதுவும் பேசாமல் கே எல் ராகுல் அவர் சொல்வதை பணிவோடு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து கே எல் ராகுல் நீக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டு மெகா ஆக்‌ஷனில் அவர் லக்னோ அணியால் தக்கவைக்கப்பட மாட்டார் என பரபரப்பான தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் லக்னோ அணி தரப்பில் இதற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் படி லக்னோ அணி கேப்டன் பொறுப்பில் இருந்து கே எல் நீக்கப்படவில்லை என்று உறுதியாக மறுத்துள்ளனர். இதற்கிடையில் கே எல் ராகுல் ஆர் சி பி மற்றும் சி எஸ் கே ஆகிய அணிகளுக்கு மாற உள்ளதாக சொல்லப்படுகிறது.