ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 மே 2024 (14:46 IST)

தோனிக்கு காலில் காயம்.. அதுக்காக எல்லாரும் தோனி ஆகிட முடியாது..! – சிஎஸ்கே பயிற்சியாளர் ப்ளெமிங் பதிலடி!

சமீபமாக தோனி கடைசி ஓவர்களில் நின்று விளையாடுவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு சிஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் விளக்கம் அளித்துள்ளார்.



நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்று 12 புள்ளிகளுடன் ப்ளே ஆப் செல்வதற்கான போராட்டத்தில் உள்ளது. இந்த சீசனே ஐபிஎல்லில் தோனிக்கு கடைசி சீசனாக இருக்கலாம் என பேசிக் கொள்ளப்படும் நிலையில் தோனியை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு மைதானம் வருகின்றனர்.

சமீபத்தில் அவ்வாறாக நடந்த போட்டியில் கடைசி ஓவரில் தோனி இறங்கி விளையாடியபோது பந்தை அடித்து விட்டு ஓடாமல் இருந்ததும், மிட்செல் ரெண்டு பக்கமும் ஓடி ரன் ஆவுட் ஆக தெரிந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தோனி ஃபோர், சிக்ஸ் அடிக்க வேண்டும் என்பதற்காகவே பேட்டிங்கை விட்டுக்கொடுக்காமல் ஓடாமல் இருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தது.


இந்நிலையில் தோனியின் உடல்நிலை குறித்து சிஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங்ஸ் பேசியுள்ளார். அதில் அவர் “தோனிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் நீண்ட நேரம் நின்று பேட்டிங் செய்ய முடியாது. அப்படி செய்தால் அவர் விளையாடவே முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். அதனால்தான் கடைசி ஓவர்களில் களம் இறங்குகிறார். அவரை 9வது இடத்தில் களமிறங்குகிறார் என்பதாலேயே அவரால் போட்டியில் இம்பேக்ட்டான ஆட்டத்தை தர முடியாது என நினைத்து விட வேண்டாம். தோனிக்கு மாற்றாக அணியில் வேறு விக்கெட் கீப்பர்கள் கூட உள்ளனர். ஆனால் எல்லாராலும் தோனி ஆகிவிட முடியாது” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K