வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 மே 2024 (10:41 IST)

உங்க எல்லாரையும் ஏமாத்திட்டேன்.. என்ன மன்னிச்சிடுங்க! – பஞ்சாப் கேப்டன் சாம் கரண்!

Sam Curran
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்து ப்ளே ஆப் தகுதியை இழந்த நிலையில் கேப்டன் சாம் கரண் மன்னிப்பு கேட்டுள்ளார்.



ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ப்ளே ஆப் தகுதி பெறுவதற்காக ஐபிஎல் அணிகளிடையே பெரும் போட்டி நடந்து வருகிறது. நேற்று ஆர்சிபி – பஞ்சாப் அணிகள் மோதிக் கொண்ட நிலையில் இதில் எந்த அணி தோற்றாலும் ப்ளே ஆப் தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும் என்பதால் பெரும் பரபரப்புடன் இந்த போட்டி அமைந்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்த நிலையில் சேஸிங் இறங்கிய பஞ்சாப் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியை தொடர்ந்து பஞ்சாப் அணியும் ப்ளே ஆப் தகுதி வாய்ப்பை இழந்துள்ளது.

பஞ்சாப் அணியின் தோல்வி குறித்து பேசிய அதன் கேப்டன் சாம் கரண் “நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் நேர்மறையான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் அது போட்டியின் இறுதிவரை செல்வதற்கு போதுமானதாக இல்லை. நாங்கள் தொடர்ந்து எங்களை வலுப்படுத்தி வருகிறோம். ரசிகர்களை ஏமாற்றியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K