தொடர்புடைய செய்திகள்
- ரத்தம் ஒரு சொட்டு மிச்சமிருந்தாலும்.. விடாமுயற்சி! போராடி தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
- சதம் விளாசிய இஷான் கிஷன்.. சொல்லி அடித்த ஐதராபாத்! புதிய ரன் ரெக்கார்ட்!
- இரக்கமில்லையா உனக்கு.. அடித்து வெளுக்கும் SRH! அரை சதம் விளாசிய RR பவுலர்ஸ்!
- தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!
- செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!
ஜோஃப்ரா அடித்து துவம்சம் செய்த SRH பேட்ஸ்மேன்கள்.. உலகளவில் மோசமான சாதனை!
ஐபிஎல் தொடர் தொடங்கி ரசிகர்களை மெல்ல உள்ளிழுத்துக் கொண்டுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் ருத்ரதாண்டவம் ஆடினர். இந்த போட்டியில் டாஸ் வென்று ராஜஸ்தான் பவுலிங் எடுத்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கியது.
அந்த அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான் மற்றும் கிளாசன் ஆகிய நால்வரின் அதிரடியான ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்களை அடித்துக் குவித்தது. இது ஐபிஎல் தொடரில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதில் அதிரடியாக ஆடிய இஷான் கிஷான் சதமடித்துக் கலக்கினார்.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகக் கம்பேக் கொடுத்த இங்கிலாந்தைச் சேர்ந்த பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வள்ளலாக மாறினார். அவர் பந்தில் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசினர் SRH பேட்ஸ்மேன்கள். இந்த இன்னிங்ஸில் 4 ஓவர்கள் வீசி ஆர்ச்சர் 76 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் விட்டுக்கொடுத்த மிக அதிகபட்ச ரன்கள் என்ற மோசமான சாதனையை இதன் மூலம் ஆர்ச்சர் படைத்துள்ளார்.