இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி நடைபெற உள்ள நிலையில் ஹர்திக் பாண்ட்யா தோனியை சென்று அணைத்துக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2025 சீசன் தொடங்கி விட்ட நிலையில் சிகர நிகழ்வாக இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ளன. இந்த போட்டியில் அன்கேப்டு வீரராக எம் எஸ் தோனி களமிறங்குகிறார். அவரது சிக்ஸரை காண ரசிகர்களும் ஆர்வமாக தயாராகி வருகின்றனர்.
இன்று போட்டி நடைபெற உள்ளதால் மும்பை அணியினரும் சென்னை வந்துள்ள நிலையில் இரு அணியினரும் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அங்கு தோனியை கண்ட மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஓடிச்சென்று தோனியை அணைத்துக் கொண்டு பேசினார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காயம் காரணமாக இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K
HP ???? MSD#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #CSKvMI [Hardik Pandya, MS Dhoni] pic.twitter.com/JtCDgnShBq
— Mumbai Indians (@mipaltan) March 22, 2025