சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்ணயித்த இமாலய இலக்கை சேஸ் செய்ய முடியாவிட்டாலும் முடிந்த அளவு இலக்கை நெருங்கி தோல்வியடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
சன்ரைசர்ஸின் 287 என்ற இமாலய இலக்கை சேஸ் செய்ய புறப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் சில ஓவர்களிலேயே கிடுகிடுவென விக்கெட்டுகள் விழுந்தது. ஜெய்ஸ்வால் ஒரு ரன்னிலேயே அவுட்டான நிலையில், ரியன் பராக் 4 ரன்களிலும், நிதிஷ் ரானா 11 ரன்களிலும் அவுட் ஆனார்கள். சஞ்சு சாம்சன் நின்று அதிரடியாக விளையாடி 37 ரன்களில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசி 66 ரன்களை குவித்தார்.
மிடில் ஆர்டரில் இறங்கிய துருவ் ஜுரெல் சிறப்பாக விளையாடி 30 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் விளாசி 70 ரன்களை குவித்து ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சிம்ரன் ஹெட்மயர் 42 ரன்களும், ஷுபம் துபே 34 ரன்களும் அடித்தனர்.
287 என்பது இமாலய இலக்குதான் என்றாலும் விடாமல் போராடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 242 என்ற டிசண்டான ரன்களை பெற்று 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோல்வி அடைந்திருந்தாலும் வெற்றிகரமான தோல்வி என்னும் நிலையில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் அணி, பந்து வீச்சிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
Edit by Prasanth.K