திங்கள், 9 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (10:34 IST)

சச்சினின் அந்த சாதனையை ஜோ ரூட்டால் முறியடிக்க முடியும்… ரிக்கி பாண்டிங் நம்பிக்கை!

டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த தற்கால தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுபவர் ஜோ ரூட். அயர்லாந்து அணிக்கு எதிராக தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 12000 ரன்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டினார்.

தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை அவர் தன் கைவசம் வைத்துள்ளார். அவருக்கு ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் ஜோ ரூட்டால் டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் அதிக ரன்கள் என்ற சாதனையை முறியடிக்க முடியும் என ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதில் “தற்போது ரூட்டுக்கு 33 வயது ஆகிறது. அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி, இங்கிலாந்து கிரிக்கெட் அணி அதிகளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் அவரால் இன்னும் 4 ஆண்டுகளில் சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.