ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (15:22 IST)

கண்டிப்பாக நான் இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளர் ஆகமாட்டேன்… ரிக்கி பாண்டிங் உறுதி!

உலகக் கிரிக்கெட்டின் தனித்தன்மை கொண்ட ஆளுமையான ரிக்கி பாண்டிங் தற்போது பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு கடந்த 7 ஆண்டுகளாக அவர் பயிற்சியாளராக பணியாற்றினார். டெல்லி  அணி கடந்த 7 சீசன் களாக சிறப்பாக செயல்பட்ட போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றும் குறிப்பாக கடந்த மூன்று சீசன்களில் பிளே ஆப் சுற்றுக்கு கூட டெல்லி அணியை கொண்டு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் டெல்லி அணியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு புதிய பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அது குறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங் “கண்டிப்பாக நான் இங்கிலாந்து அணிக்குப் பயிற்சியாளராக செயல்பட மாட்டேன். என் பெயர் அவர்கள் பட்டியலில் இருந்தால் இப்போதே அவர்கள் அழித்துவிடலாம்” எனக் கூறியுள்ளார்.