ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2024 (07:19 IST)

இந்தியா - வங்கதேசம் டி20 தொடர்... மைதானங்கள் மாற்றம்..பிசிசிஐ அறிவிப்பு..!

chepauk
.இந்தியா மற்றும் வங்கதேசம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் மைதானங்கள் மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் விளையாட இருக்கும் நிலையில் முதல் டி20 போட்டி தர்மசாலாவில் நடைபெற இருந்த நிலையில் தற்போது அதே குவாலியருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல்   இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து முதல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுவதாக இருந்த நிலையில் இந்த போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. அதேபோல் கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் 2வது டி20 போட்டி சென்னையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தின விழா ஏற்பாடுகள் நடைபெறுவதால் தான் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Edited by Siva