1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (09:31 IST)

இங்கிலாந்து கிரிக்கெட் முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப் தற்கொலை செய்துகொண்டதாக மனைவி தகவல்!

இங்கிலாந்து கிரிக்கெட் முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப் தற்கொலை செய்துகொண்டதாக மனைவி தகவல்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கிரஹாம் தோர்ப் காலமானதாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது. அவரின் மறைவை உறுதி செய்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் “தோர்ப் காலமானார் என்ற செய்தியை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.  இந்த அதிர்ச்சியை விவரிக்க வார்த்தைகள் போதவில்லை” என வருத்தத்தைத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கிரஹாம் தோர்ப் தற்கொலை செய்துகொண்டதாக அவரின் மனைவி அமாண்டா தோர்ப் தெரிவித்துள்ளார். அவர், “அவரது உடல்நலம் கடந்த ஆண்டுகளாக மோசமடைந்து கொண்டே வந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்தும் அவரது உடல்நிலை சீராகவில்லை.

அவரை மிகவும் நேசிக்கும் நாங்கள் இருந்தும் அவருக்கு எதுவும் சரியாகவில்லை. அவர் இல்லாமல் இருந்தால்தான் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம் என அவர் நம்பத் தொடங்கினார். கடுமையான மன அழுத்தத்தில் இருந்த அவர் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொண்டார்” எனக் கூறியுள்ளார்.