தொடர்புடைய செய்திகள்
- இலங்கை: "ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்" - கொழும்பில் தடையை மீறி திரண்ட மக்கள்
- டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: அதிக ரன்கள் அடித்த வீரர்களில் கோலி முதலிடம்!
- இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடத்த பேச்சுவார்த்தை!
- ராகுலுக்கு முழு ஆதரவு உண்டு… பயிற்சியாளர் டிராவிட் அளித்த நம்பிக்கை!
- இலங்கை - ஆப்கானிஸ்தான் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி இதுதான்!
சாதனைகள் என்றால் அது உடைக்கப்பட வேண்டும்… கோலிக்கு வாழ்த்து சொன்ன ஜெயவர்த்தனே
இந்திய அணியின் மூத்த வீரர் கோலி, நேற்று உலகக்கோப்பையில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற ஜெயவர்த்தனேவின் சாதனையை முறியடித்தார்.
நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் கோலி 11 ரன் கள் அடித்தபோது, டி-20 உலகக்கோப்பையில் அதிக ரன் கள் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள ஜெயவர்தனே( இலங்கை -1016) சாதனையை முறியடித்து, விராட் கோலி அதிக ரன்கள் குவிந்த வீரராக முதலிடம் பிடித்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள ஜெயவர்த்தனே “சாதனைகள் என்றால் அது முறியடிக்கப்படும். என்றோ எப்போதோ என் சாதனைகள் முறியடிக்கப்படும். அது கோலி என்பது மகிழ்ச்சி. கோலி, தன் கேரியர் முழுக்க ஒரு போர் வீரராக விளையாடி வருகிறார்” எனக் கூறியுள்ளார். ஜெயவர்த்தனே 31 இன்னிங்ஸில் படைத்த சாதனையை கோலி 22 இன்னிங்ஸ்களில் படைத்துள்ளார்.