1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India Pakistan test series in australlia

இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடத்த பேச்சுவார்த்தை!

ஆசியக் கோப்பை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இருநாட்டு டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவில் நடத்த பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடந்தது 2007 ஆம் ஆண்டுதான் கடைசி. அதன் பிறகு இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் மோதவில்லை. இப்போது இரு நாட்டு வீரர்களும் டெஸ்ட் போட்டிகளில் எதிர்கொண்டதே இல்லை.

இந்நிலையில் இப்போது ஆஸ்திரேலியாவில் இந்தியா பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடரும், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதும் ஒருநாள் தொடரும் நடத்த பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டும் மோதுகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடந்தால் இந்திய அணி அங்கு செல்லாது என்றும், மாறாக ஆசியக் கோப்பை வேறு ஒரு பொதுவான நாட்டுக்கு மாற்றப்படலாம் எனவும் சமீபத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியது சர்ச்சைகளை உருவாக்கியது.
 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
நெதர்லாந்து வெற்றியால் தப்பித்த இந்தியா: ஜிம்பாவே பரிதாப தோல்வி