தொடர்புடைய செய்திகள்
- இது சரிபட்டு வராது… களத்துல இறங்கிட வேண்டியதுதான்- பென் ஸ்டோக்ஸ் எடுத்த முடிவு!
- இப்போதும் கைமீறிப் போய்விடவில்லை… தொடரை வெல்வோம்- பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை!
- கிரிக்கெட்டில் இருந்து இந்த விதியை நீக்கவேண்டும்… பென் ஸ்டோஸ் கருத்து!
- என் ஒட்டுமொத்த கிரிக்கெட் கேரியரில் செய்ததை ஒரே இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் செய்துவிட்டார்- அலெஸ்டர் குக் ஜாலி கமெண்ட்!
- 147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இதுதான் இரண்டாவது முறை… சாதனை படைத்த ஜெய்ஸ்வால்!
8 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள்… கவாஸ்கர் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 இடங்கள் முன்னேறி 15வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் நான்காவத் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த அவர் தன்னுடைய முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் 979 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் சுனில் கவாஸ்கரின் முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் 938 ரன்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக டான் பிராட்மேன் 8 டெஸ்ட் போட்டிகளில் 1210 ரன்களை சேர்த்ததுதான் உலகளவில் இன்றுவரை சாதனையாக அமைந்துள்ளது. பிராட்மேனுக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் ஜெய்ஸ்வால் இடம்பிடித்துள்ளார்.