ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2024 (10:50 IST)

இது சரிபட்டு வராது… களத்துல இறங்கிட வேண்டியதுதான்- பென் ஸ்டோக்ஸ் எடுத்த முடிவு!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இது இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பெற்ற மிகப்பெரிய ரன் வித்தியாசத்திலான வெற்றியாகும். இதன் மூலம் இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணியின் ஆக்ரோஷமான பாஸ்பால் கிரிக்கெட்டுக்கு இந்திய பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் தக்க விதத்தில் பதிலளித்துள்ளனர். இதனால் இங்கிலாந்து பாஸ் பால் கிரிக்கெட் அனுகுறையை இங்கிலாந்து முன்னாள் வீரர்களே விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச முடிவு செய்துள்ளாராம். ஆல்ரவுண்டரான ஸ்டோக்ஸ் கேப்டன் ஆன பிறகு பந்துவீசுவதைக் குறைத்துக் கொண்டார். கடைசியாக அவர் கடந்த ஜூன் மாதம் நடந்த போட்டியில்தான் பந்துவீசினார் என்பது குறிபிடத்தக்கது.