1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ben stokes talked about Umpires call decion to be removed

கிரிக்கெட்டில் இருந்து இந்த விதியை நீக்கவேண்டும்… பென் ஸ்டோஸ் கருத்து!

ஜெய்ஸ்வால்
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இது இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பெற்ற மிகப்பெரிய ரன் வித்தியாசத்திலான வெற்றியாகும். இதன் மூலம் இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மிக மோசமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விளையாடினர். 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். இந்த போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிலரின் விக்கெட்கள் சர்ச்சைகள் கிளப்பின.

இதுபற்றி போட்டி முடிந்ததும் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் “கிரிக்கெட்டில் இருந்து அம்பயர்ஸ் கால் என்ற முறையை முழுவதும் நீக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரை பந்து ஸ்டம்ப்பில் படுகிறதா இல்லையா என்பதுதான் முக்கியம்.  இதைப் பற்றி நான் அதிகமாக பேச விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் தோல்வி பெற்றதால் புலம்புவதாக பலரும் நினைக்கலாம். ” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இப்போதும் கைமீறிப் போய்விடவில்லை… தொடரை வெல்வோம்- பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை!