வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (08:43 IST)

147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இதுதான் இரண்டாவது முறை… சாதனை படைத்த ஜெய்ஸ்வால்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான பந்து, ஜெய்ஸ்வாலின் இரட்டை சதம் ஆகியவற்றின் துணையால் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இது இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பெற்ற மிகப்பெரிய ரன் வித்தியாசத்திலான வெற்றியாகும்.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த இன்னிங்ஸில் மட்டும் 12 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற வாசிம் அக்ரம்மின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்டில் ஒரே இன்னிங்ஸில் வாசிம் அக்ரம் 12 சிக்சர்களை விளாசியதே இதுவரை உலக சாதனையாக இருந்தது. அதை இப்போது ஜெய்ஸ்வால் சமன் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.