வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2024 (18:34 IST)

இளம் வீரர்களுடன் இந்த செயல்பாட்டை செய்ததில் மகிழ்ச்சி- ரோஹித் சர்மா

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில்,  இதுகுறித்து ரோஹித் சர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
 
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது.
 
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்கனவே 3 போட்டிகளில் இந்தியா வென்றது.
 
இந்த நிலையில், 4 வது டெஸ்ட் தொடர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.
 
இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 104.5ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்கள் எடுத்தது. இதையடுத்து,  இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இதில் 307 ரன்னுடன் ஆல் அவுட் ஆனது.
 
46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2 வது இன்னிங்ஸை தொடங்கியது. 53.5  ஓவர்களில் 145 ரன்னுக்கு  ஆல் அவுட் ஆனது.  இந்திய வீரர் அஸ்வின் 5 விக்கெட்டும் குல்தீப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இந்திய அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட  நிலையில், இலக்கை நோக்கி 2 வது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி 61 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு  192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
இப்போட்டியில் வெற்றி பெற்ற பின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில், இது  உண்மையில் கடினமாக தொடராக அமைந்தது. 4 போட்டிகளின் முடிவில் இத்தொடரை கைப்பற்றியது பெருமையாக உள்ளது.  முன்னணி வீரர்கள் இல்லாமல், இளம் வீரர்களுடன் இந்த செயல்பாட்டை செய்ததில் மகிழ்ச்சி. டொமஸ்டில் சிறப்பாக செயல்பட்ட அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் சவால்களுக்கு இடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.