செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (11:04 IST)

இப்போதும் கைமீறிப் போய்விடவில்லை… தொடரை வெல்வோம்- பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இது இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பெற்ற மிகப்பெரிய ரன் வித்தியாசத்திலான வெற்றியாகும். இதன் மூலம் இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணியின் ஆக்ரோஷமான பாஸ்பால் கிரிக்கெட்டுக்கு இந்திய பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் தக்க விதத்தில் பதிலளித்துள்ளனர். இதனால் இங்கிலாந்து பாஸ் பால் கிரிக்கெட் அனுகுறையை இங்கிலாந்து முன்னாள் வீரர்களே விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் போட்டிக்குப் பின்னர் பேசிய போது “கிரிக்கெட்டில் சில நேரம் நாம் நினைப்பது போல நடக்காது. அப்படியான ஒரு தோல்விதான் இது. மீண்டும் சிறப்பாக விளையாடி இந்த தொடரை வெல்வோம். அதற்கான வாய்ப்பு எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் அதைதான் செய்யப் போகிறோம்” எனக் கூறியுள்ளார்.