1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (10:37 IST)

என் ஒட்டுமொத்த கிரிக்கெட் கேரியரில் செய்ததை ஒரே இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் செய்துவிட்டார்- அலெஸ்டர் குக் ஜாலி கமெண்ட்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இது இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பெற்ற மிகப்பெரிய ரன் வித்தியாசத்திலான வெற்றியாகும்.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த இன்னிங்ஸில் மட்டும் 12 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற வாசிம் அக்ரம்மின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். 1996 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்டில் ஒரே இன்னிங்ஸில் வாசிம் அக்ரம் 12 சிக்சர்களை விளாசியதே இதுவரை உலக சாதனையாக இருந்தது.

இந்நிலையில் ஜெய்ஸ்வாலின் இந்த அசுரத்தனமான இன்னிங்ஸ் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் “என் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் அடித்ததே மொத்தம் 11 சிக்ஸர்கள்தான். ஆனால் அதை ஒரே இன்னிங்ஸில் செய்துள்ளார் ஜெய்ஸ்வால்” எனக் கூறியுள்ளார்.