1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ishan kishan century in ranji trophy

ரஞ்சி கோப்பையில் கலக்கும் இஷான் கிஷான்… சதமடித்து அசத்தல்!

இந்தியா
ரஞ்சி கோப்பையில் ஜார்கண்ட் அணிக்காக இஷான் கிஷான் விளையாடி வருகிறார்.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இஷான் கிஷான் 130 பந்துகளில் 210 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும் அதில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் அடங்கும். அவர் 126 பந்துகளில் 200 ரன்கள் சேர்த்தார். இதுவரை அடிக்கப்பட்ட இரட்டை சதங்களிலெயே  இதுதான் அதிவேக சதம். அதுமட்டுமில்லாமல் இஷான் கிஷான் தன்னுடைய முதல் சர்வதேச சததத்தையே இரட்டை சதமாக மாற்றிய பெருமை இஷான் கிஷானையே சேரும்.

இந்நிலையில் இப்போது ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வரும் அவர்  ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடும் போது சதமடித்து அசத்தியுள்ளார். 195 பந்துகளை சந்தித்த இஷான்  8 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 132 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
காயத்தால் பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத மெஸ்ஸி… இறுதிப் போட்டி களமிறங்குவாரா?