திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2022 (12:01 IST)

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி : 5000 கிமீ பாயும் என தகவல்!

missiles
5000 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணு ஆயுத ஏவுகணைகளை தாங்கிச் சென்று துல்லியமாகத் தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்திய எல்லையில் சீனா படையினர் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் இந்திய ராணுவத்தில் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியபோது 5000 கிலோ மீட்டர் தூரத்திற்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தாங்கிச் சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சீனாவின் எந்த பகுதிக்கும் இந்த ஏவுகணையால் தாக்க முடியும் என்றும் அதேபோல் ஐரோப்பிய நாடுகளையும் தாக்கக் கூடிய அளவுக்கு வல்லமை படைத்தது இந்த ஏவுகணை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran