வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2022 (16:27 IST)

52 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு சதமடித்த புஜாரா…!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸை விளையாடி 150 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதையடுத்து இந்திய அணி 254 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. புஜாரா மற்றும்  சுப்மன் கில் ஆகிய இருவரும் அடுத்தடுத்து செஞ்சுரி அடித்த நிலையில் சற்று முன் வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே மோசமாக விளையாடி வந்த புஜாரா 52 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சதமடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அணியில் இடம் கிடைக்காமல் இருந்த புஜாரா, மீண்டும் அணிக்குள் வந்து சதமடித்து அசத்தியுள்ளார்.