திங்கள், 4 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (12:19 IST)

பாஜகவில் இணைகிறாரா யுவ்ராஜ் சிங்.. லோக்சபா தேர்தலில் போட்டி?

கபில் தேவுக்குப் பிறகு இந்திய பின்வரிசை பேட்ஸ்மேன்களில் மிக முக்கியமானவராக உருவாகி வந்தவர் யுவ்ராஜ் சிங். இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற 2007 மற்றும் 2011 ஆகிய உலகக் கோப்பை தொடர்களில் அவர் பங்களிப்பு அளப்பரியது.

ஆனால் அவரால் அதற்கடுத்து வந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாட முடியாத சூழல் உருவானது. ஆனால் இடையிடையில் அவர் அணிக்குள் வருவதும் மீண்டும் தூக்கப்படுவதுமாக இருந்தார். பின்னர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இப்போது வெளிநாட்டு கிரிக்கெட் லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் யுவ்ராஜ் சிங் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார். இந்நிலையில் அவர் பாஜகவில் இணைந்து பஞ்சாப் மாநிலத்தில் லோக் சபா தேர்தலில் போட்டியிடப் போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.