வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (14:58 IST)

டிராவிட் அறிவுரையை ஏற்காத இஷான் கிஷான்… ஐபிஎல் தொடருக்கு பயிற்சி!

இந்திய அணியில் சமீபத்தைய சில ஆண்டுகளாக வாய்ப்புகள் பெற்று வருகிறார் இஷான் கிஷான். பங்களாதேஷ் அணிக்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டி சதத்தையே இரட்டை சதமாக மாற்றினார். ஆனாலும் அவருக்கான இடம் இந்திய அணியில் இன்னும் நிரந்தமராகவில்லை.

அதே போல தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவாரா இல்லை நான்காவது வீரராக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது அவர் இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

அதில் “இஷான் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டுமென்றால், அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போதுதான் அவர் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவார்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் இப்போதைக்கு இஷான் கிஷான் மேல் தேர்வுக்குழுவினரின் பார்வை இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஆனால் டிராவிட்டின் அறிவுரையை ஏற்று ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடாமல் இஷான் கிஷான் இப்போது பாண்ட்யாவோடு இணைந்து குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.