திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2024 (07:51 IST)

ஷுப்மன் கில் விஷயத்தில் இன்னும் பொறுமை வேண்டும்… பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆதரவு!

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக கடந்த வருடத்தின் பெரும்பாலான நாட்கள் இடம்பிடித்திருந்தார்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இன்னும் தன்னை நிரூபித்துக் கொள்ளவில்லை. தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரிலும் சொதப்பி வருகிறார். இதனால் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கூட கில் புஜாரா கூட அனுபவிக்காத சலுகைகளை அனுபவித்து வருகிறார் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுபற்றி தற்போடு பேசியுள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் “ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அதிகளவில் டெஸ்ட் போட்டிகள் விளையாடிய அனுபவம் இல்லை. அதனால் அவர்கள் விஷயத்தில் நாம் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.