வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (20:40 IST)

Mumbai Indians அணியின் பயிற்சியாளர் விளக்கத்திற்கு ரோஹித் சர்மாவின் மனைவி மறுப்பு

Rohith sharma- Ritika
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் விளக்கத்திற்கு ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா மறுப்பு தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் தொடரில் முன்னணியாக உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. சமீபத்தில், இந்த அணியில் கேப்டன் சி பொறுப்பில் இருந்து ரோஹித்சர்மாவை நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஹர்த்திக் பாண்ட்யாவை நியமித்த அணி நிர்வாகம்.

இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்ச்சியாளர் பவுச்சர்  இதுபற்றி விளக்கமளித்திருந்தார். அந்த   வீடியோவில், ‘’ஓரிரு சீசன்களில் ரோஹித் சர்மா, சிறப்பாக செயல்படவில்லை,. கேப்டன் பொறுப்பை வேறொருவருக்கு தருவதன் மூலம் அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்ததால்….குடும்பத்துடன் நேரம் செலவளிக்கலாம்'' என்று கூறியிருந்தார்.

இதற்கு ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா,  இதில் பல விஷயங்கள் தவறாக சொல்லப்பட்டுள்ளது என அந்த வீடியோவின் கீழ் கமெண்ட் பதிவிட்டுள்ளார்.