திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (13:07 IST)

ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ள மாட்டேன்..! – ப்ரீத்தி ஜிந்தா திடீர் அறிவிப்பு!

நாளை நடக்க உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் ப்ரீத்தி ஜிந்தா கலந்துகொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்படும் போட்டி தொடராக உள்ளது. கடந்த ஆண்டு வரை ஐபிஎல்லில் 8 அணிகள் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன.

இதற்கான வீரர்கள் தேர்வு, ஏலம் நாளை நடைபெற உள்ளது. இதில் அனைத்து அணி உரிமையாளர்களும் பங்கேற்று வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் அணி உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தான் நாளை நடைபெறும் ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் “கடந்த சில நாட்களாக ஏலம் குறித்தும் வீரர்கள் குறித்தும் என்னுடைய அணியிடம் நிறைய ஆலோசனைகள் நடத்தியுள்ளேன். ரசிகர்களே வீரர்கள் தேர்வு குறித்து உங்களின் பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.