ஐபிஎல்-2023: தாகூர், குர்பாஸ் அதிரடியால் பெங்களூர் அணிக்கு இமாலய இலக்கு!
இன்றைய போட்டியில், ராஜஸ்தான் அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையடி வருகிறது.
இன்றைய போட்டியில், டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு செய்தது.
எனவே முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் களமிறங்கினர்.
இதில், குர்பாஸ் 57 ரன்களும், ரிங்கு சிங் 46 ரன்களும், தாகூர் 68 ரன்களும் அடித்தனர். எனவே 20ஓவர்கள் முடிவில், கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து, பெங்களூர் அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
பெங்களூர் அணி தரப்பில், வில்லி மற்றும் சர்மா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சிராஜ், பிராஸ்வெல், பட்டேல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, பேட்டிங் செய்துவரும் பெங்களூர் அணியில் விராட் கோலி 9 ரன்கள் மற்றும் பிளசிஸ் 1 ரன்னுடன் விளையாடி வருகின்றனர்.