வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2023 (15:32 IST)

கொரொனா பரவல்...ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு எச்சரிக்கை!

ஐபிஎல் -2023  - சீசன் 16 வது தற்போது இந்தியாவில்  நடைபெற்று வரும் நிலையில், வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் கொரொனா  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரொனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறதது. இதனால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரொனா தொற்றுப்பரவலைக் குறைக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் பலவேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 5335 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஐபிஎல்-16 வது சீசன் கிரிக்கெட்  நடைபெற்று வருவதால், பிசிசியை 10 ஐபிஎல் அணிகள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவுக்கு எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், வீரர்கள் மற்றும் பயிற்சியாளார்கள் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்று கூறியுள்ளது.

கடந்த சில ஐபிஎல் சீசன்கள் பயோ- பபூள் முறையில் நடைபெற்றதுடன் கடுமையான விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.