தொடர்புடைய செய்திகள்
- கொரொனா பரவல்...ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு எச்சரிக்கை!
- என்கிட்டயே உன் வேலைய காட்றியா? – அர்ஸ்தீப் சிங்கை ஸ்டேடியத்தில் வெச்சு செஞ்ச ஜூரெல்!
- ஐபிஎல் போட்டிகளில் சஹால் படைத்த சாதனை!
- 190+ ரன் சேஸிங்கில் அஸ்வினை ஓப்பனராக இறக்கிய சஞ்சு சாம்சன்!
- ஐபிஎல்-2023: ஜூரெல் அதிரடி ஆட்டம்; பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரிவில் வெற்றி....
50 ஓவர் உலகக் கோப்பையை மிஸ் செய்கிறாரா கேன் வில்லியம்சன்? நியுசி அணிக்குப் பின்னடைவு
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் அந்த அணியால் கழட்டி விடப்பட்டார். இந்நிலையில் ஏலத்தில் அவர் கலந்துகொண்டார். ஏலத்தின் போது கேன் வில்லியம்சன் பெயர் வாசிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஏலத்தொகை உயர்த்தப்படாததால் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு குஜராத் அணி அவரை வாங்கியது. கடந்த ஆண்டில் அவரது ஏல மதிப்பு ரூ.14 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடினார். இந்த போட்டியில் பீல்டிங் செய்தபோது, காயமடைந்தார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வில்லியம்சன் தற்போது சிகிச்சைக்குப் பிறகு நியுசிலாந்து நாட்டுக்கு திரும்பியுள்ளார். காயம் காரணமாக வில்லியம்சன் விரைவில் வர உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர் விளையாடவில்லை என்றால் டாம் லாதம் அணியை வழிநடத்தலாம் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்