1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (21:20 IST)

ஐபிஎல்-2023: கிரீன், கிஷான் அதிரடியில் உயர்ந்த ஸ்கோர்.... வெற்றி இலக்கை எட்டுமா சன்ரைஸ் ஹைதராபாத் அணி?

ஐபிஎல் இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி ஹைதராபாத் அணிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
 

ஐபிஎல் -23; 16 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய லீக் ஆட்டத்தில்,  மும்பை இந்தியன்ஸ்  அணி மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. எனவே மும்பை  இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இதில், ரோஹித்சர்மா 28 ரன்களும், கிஷான் 38 ரன்களும், கிரீன் 64 ரன்களும், வர்மா 37 ரன்களும், டேவிட் 14 ரன்களும் அடித்தனர்.

எனவே 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்து, ஹைதராபாத் அணிக்கு 193  ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஹைதராபாத் அணியின் சார்பில், புவனேஷ்குமார் , நடராஜ தலா 1 விக்கெட்டும், ஜேன்சன் 2 விகெட்டும் கைப்பற்றினர்.