திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (23:43 IST)

ஐபிஎல் 2022-;சென்னை கிங்ஸ் அணி சூப்பர் வெற்றி

chennai bengalore
15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடத்து வருகிறது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  பெங்களூர் அணியை வீழ்த்தியுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் பிளசிஸ் முதலில் பவுலிங்   தேர்வு செய்தார்.

சென்னை கிங்ஸ் அணியில்,கெய்வாட்  17 ரன்களும் , உத்தப்பா 88 ரன்களும்,  டூப் 95 ரன்களும்  அடித்து   20  ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216  ரன்கள் அடித்து, பெங்களூர் அணிக்கு 217  ரன்கள்  வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கி பேட்டிங் செய்த பெங்களூர் அ அணியில், பிளசிஸ் 8 ரன்களும், ராவட் 12 ரன்களும், கோலி 1 ரன்னும்,   மேக்ஸ் வெல் 26 v, அஹமது 41 , பிரபுதேசாய் 34 ரன்களும், தினேஷ் கார்த்திக் 34 ரன்களும், எடுத்து. 20 ஓவர்கள்  முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தனர்.

எனவே,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றனர்.

தொடர் தோல்வியைச் சந்தித்த சென்னை  சூப்பர் கிங்ஸ் அணியினர் இத்தொடரில் பெரும் முதல் வெற்றி இதுவாகும். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.