திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 12 நவம்பர் 2023 (17:13 IST)

கோலி அரைசதம் ...நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி நிதான ஆட்டம்....

நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி 28  ஓவர்களில் 2  விக்கெட் இழப்பிற்கு 198  ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.  

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிககள் வெளியேறிவிட, இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இன்றைய  லீக் போட்டியில், இந்தியா-      நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி 28.5   ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 200  ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.  சுப்மன் கில் மற்றும்  ரோஹித் சர்மா  அவுட்டாகியுள்ள  நிலையில், கோலியும்(51 ரன்கள்), அரைசதம் விளாசிய நிலையில் அவுட்டாகினார்.  ஸ்ரேயாஸ் அய்யரும்   கே.எல்.ராகுலும் களத்தில்  தற்போது விளையாடி வருகின்றனர்.

நெதர்லாந்து தரப்பில் மீக்ரன்  கிளன்டேட் மேக் மற்றும் லீட் தலா 1 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.