திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (15:45 IST)

ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் முதலிடம்

subman gil
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இத்தொடரில் இந்திய அணி 8 போட்டிகளில் வென்று  16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.    இந்த நிலையில் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

அதன்படி, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை பின்னுத் தள்ளி இந்திய பேட்ஸ்மேன் சுப்மன் கில்  முதலிடம் பிடித்துள்ளார்.  இந்திய வீரர் கோலி 4 வது இடமும், ரோகித் சர்மா 5 வதும் இடமும் பிடித்துள்ளனர்.
Siraj

அதேபோல் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி வுலர்களுக்கான தரவரிசை பட்டியலில்  சிராஜ் முதலிடம் பிடித்தார்.  முதலிடத்தில் இருந்த ஷாஹீவ் 5 வது இடத்திற்கு பின்தங்கினார்.